இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 03.00 மணிக்கு கொழும்பு – டுப்ளிகேன் வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான மாலக சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொள்ளுப்பிட்டி இரவு விடுதியில் மோதல்! தர்ம அடி வாங்கிய மேர்வினின் மகன்
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மலாகா சில்வா மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கொள்ளுபிட்டியில் உள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற மோதலின் போதே இவர் தாக்கப்பட்டார் எனத் தெரியவருகின்றது. இவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதிகாலை 3 மணியளவில் ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்தே இவர் தாக்கப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாலக சில்வா முன்னரும் பல தடவைகள் இவ்வாறு இரவு நேர விடுதிகளில் மோதலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.எனினும் சமீபத்தில் இரவுநேர விடுதிகளுக்கு செல்வதை நிறுத்திவிட்டார் எனவும், தேசிய அரசியலில் ஈடுபடப் போகிறார் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்
No comments:
Post a Comment