August 19, 2015

தேசிய பட்டியல் விவகாரம் : மைத்திரி – மஹிந்த தரப்பினர் தொடர்ந்தும் பேச்சு!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கான 12 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பிலும், அவற்றைப் பகிர்ந்துகொள்வது
தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி இரு தரப்பினருக்கும் இடையே நேற்றைய தினம் (18) முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புகளில் இருந்து தேர்தல் ஆணையாளருக்கு தேசியப் பட்டியலுக்கான இரண்டு பெயர்ப்பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் எந்தப் பட்டியலை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து தேர்தல் ஆணையாளர் குழம்பிப் போயுள்ளார்.
இந்நிலையில், இவ்விரு தரப்பினரும் தேசியப்பட்டியல் குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவில்லையெனில், இவ் விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment