குமரன் பத்மநாதனைக் கைது செய்யும் அளவுக்கு ஆதாரங்கள் போதாதென சட்டமா அதிபர் மேன்முறையிட்டு நீதிமன்றில் இன்று தெரிவித்தார்.
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜே வி பியினால் 198 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பில் சட்ட அதிபர் திணைக்களம் விசாரணை நடத்த அனுமதி கேட்டதற்கு அமைய அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இதுவரையில் கே.பி.யின் குற்றச் செயல்கள் தொடர்பில் எந்த தகவலையும் திரட்ட முடியவில்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் தொடர்ந்து விசாரணை இடம்பெறுவதாகவும், அதற்கு மேலதிக காலம் தேவை என்றும் கோரப்பட்டது.
இதன்படி இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment