சர்வதேச காணாமற்போனோர் தினத்தை மையப்படுத்தி எதிர்வரும் வியாழக்கிழமை 03.09 அன்று மாலை 17 மணிக்கு யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்பு
நிகழ்வு நடைபெற இருக்கிறது .
65 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழின அழிப்புக்கு இன்றுவரை எவ்விதமான நீதியும் கிடைக்கபெறவில்லை.அதற்கு மாறாக நடைபெற்ற போர்குற்றங்கள் , மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் , இன அழிப்புக்கு சிங்கள் பேரினவாத அரசு உள்ளக விசாரணையின் ஊடாக நீதி வழங்கும் என்று அனைத்தையும் மூடி மறைக்க தமிழின அழிப்புக்கு உடந்தையாக இருந்து ஒரு சில வல்லரசுகள் திட்டமிட்டுள்ளனர் .
இவ்விடையத்தில் இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தேர்தல் மேடைகளில் அனைத்துலக சுயாதீன விசாரணையை முழங்கிய , இன்றைய மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசீர்வாதத்தை வழங்கி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி நயவஞ்சகமாக செயற்படுவதை யாரும் மறுக்க முடியாது .
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையின் தேவையை புலம்பெயர் மக்கள் ஆகிய எங்களின் , தமிழக தொப்புள்கொடி உறவுகளின் , மற்றும் தாயகத்தில் கொலை மிரட்டலுக்கும் அஞ்சாது துணிந்து நின்று போராடிய உறவுகளின் முயற்சியே இன்று எமது பிரச்னை சர்வதேச அளவில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது .பல்லாயிரம் மக்கள் அணிதிரண்டு ஐநாவை முற்றுகை இட்டதை நாம் மீண்டும் திரும்பி பார்க்கவேண்டும் . இன்று இவ்வளவு முயற்சியையும் சிதறடிக்கும் முகமாக சில நகர்வுகள் ரகசியமான முறையில் நடக்கின்றது.
காலத்தின் தேவையை உணர்ந்து நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபை அமர்வில் யேர்மன் அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலியுறுத்துகின்றோம் .
கவனயீர்ப்பு நடைபெறும் இடம் :
Auswärtiges Amt
Werderscher Markt 1
10117 Berlin
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
நிகழ்வு நடைபெற இருக்கிறது .
இவ்விடையத்தில் இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தேர்தல் மேடைகளில் அனைத்துலக சுயாதீன விசாரணையை முழங்கிய , இன்றைய மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசீர்வாதத்தை வழங்கி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி நயவஞ்சகமாக செயற்படுவதை யாரும் மறுக்க முடியாது .
காலத்தின் தேவையை உணர்ந்து நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபை அமர்வில் யேர்மன் அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலியுறுத்துகின்றோம் .
கவனயீர்ப்பு நடைபெறும் இடம் :
Auswärtiges Amt
Werderscher Markt 1
10117 Berlin
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
No comments:
Post a Comment