11 வயதுச் சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்திய அச்சிறுமியின் சித்தப்பா முறையான 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமுக்று மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி
ஞாயிற்றுக்கிழமை (30) உத்தரவிட்டார்.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த சிறுமியை, தாயார் உடுவில் பகுதியிலுள்ள சித்தப்பா வீட்டில் கடந்த 28ஆம் திகதி கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் மறுநாள் அச்சிறுமி, தனது தாயாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் தாயார் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்றபோது, சம்பவம் நடைபெற்றது சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி என்பதால் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தினர்.
அதற்கிணங்க சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரைக் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு கூறினார்
No comments:
Post a Comment