தமிழகத்தின் இராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையரான கிருஷ்ணகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவருக்கு நெருக்கமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ணகுமாரை புலனாய்வு பிரிவு, தமிழகத்தின் க்யூ பிரிவு பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வழமையான வாகனச் சோதனையின் போதே மேலும் இருவருடன் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் பிரிஐ செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகுமார் பயணித்த காரில் இருந்து எட்டு கையடக்கத் தொலைபேசிகள், ஜிபீஎஸ் உபகரணங்கள், 75 சயனைட் குப்பிகள் மற்றும் 300 கிராம் சயனைட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அனைத்து கரையோர மாவட்டங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சோதனைசாவடிகளில் கூடுதல் விழிப்புடன் செயற்பாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகுமாரிடம் இருந்து இந்திய மற்றும் இலங்கை நாணயத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் எப்போது எவ்வாறு அவர் நாட்டிற்குள் பிரவேசித்தார் என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உடன் சந்தேகநபர் இந்தியாவிற்குள் பிரவேசித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment