இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த மாணவி சென்னையில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயிருந்தார்..குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டு இருந்தன.
26 வயதுடைய இந்த மாணவி கடந்த 25ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக விடுதியின் முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அன்றைய தினம் இந்த மாணவி கல்வி நடவடிக்கைகளுக்காக விடுதியில் இருந்து சென்ற போதிலும் கல்லூரிக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன குறித்த மாணவி கடந்த 17ம் திகதி விடுதியின் வசதிகள் தொடர்பில் கல்லூரியின் மேலிடத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் காணமல் போன மாணவி தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில் தற்போது சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment