நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பினில் உள்ளுர் விசாரணையினை ஜ.நா சிபார்சு செய்யுமானால் அதற்கு வடமாகாணசபை எந்தவித ஒத்துழைப்பினையும்
வழங்கமாட்டாதெனவும் மீறி ஆதரவளித்தால் வடமாகாணசபை முடக்கப்படுமென உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதனை மீறி வடமாகாணசபை செயற்பட்டால் நாம் எமது உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வோமெனவும் அவர் தெரிவித்தார்.
நடந்த இனஅழிப்பு தொடர்பினில் சர்வதேச விசாரணை தேவையென்பதே தமிழ் மக்களது நிலைப்பாடாகும்.ஆனால் அதனை தாண்டி சர்வதேச கண்காணிப்பின் கீழான உள்ளுர் விசாரணையினை ஜநா சிபார்சு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தொழிற்நுட்ப உதவியுடன் உள்நாட்டு விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் அதில் அடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் பங்காளிகளாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வடமாகாணசபையும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் கூட்டத்திற்கு முன்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.குறித்த சிபார்சினை ஏற்றுக்கொள்ளமுடியாதென தெரிவித்த அவர் உள்ளக விசாரணைக்கு வடமாகாணசபை ஒத்துழைத்தால் அதனை முடக்கவும் பின்னிற்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment