யாழ்.மாவட்டத்தில் தேர்தல் சட்டத்திற்கு முரணாக பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைளில் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகரிரகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அரச பேரூந்துக்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடன்
அகற்றுமாறும், இல்லாவிட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரிய திணைக்களத்திற்கு யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.
அகற்றுமாறும், இல்லாவிட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரிய திணைக்களத்திற்கு யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வலுவான பசைகள் மூலம் ஒட்டப்பட்டுள்ளதால் அதனை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சில கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் நோக்கில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
தற்போது அச் சுவரொட்டிகள் அனைத்தினையும் அகற்றுவதற்கு யாழ்.மாவட்ட உதவித்த தேர்தல் ஆணையாளரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸாரும், தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துக்களின் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு அத்திணைக்களத்தினருக்கு உரிய அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி அரச பேருந்துக்களின் தேர்தல் சுவரொட்டிகள் இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment