அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டுப் பிரதேசத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது உழவு இயந்திரம் மோதியதினாலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
விபத்தில் பலியானவர் சின்னப்பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த இராசையா பத்மநாதன் (வயது 58) என அடையாளம் காணப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
சாகாமம் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி நெல் மூடைகளுடன் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம், துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் மீது போதுயுள்ளது.
இதனால் சடுதியாக கீழே விழுந்தவர் மீது உழவு இயந்திர பெட்டியின் பின் பகுதி டயர் ஏறிச் சென்றதன் காரணமாகவே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உழவு இயந்திரத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment