யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்து பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலத்தை எலி கடித்து சேதப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலை ஊழியர்கள் சடலத்தை பொறுப்பற்ற விதத்தில் வைத்து விட்டு
சென்றதாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
மாதகல் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த பெண்குழந்தை பின்னர் இறந்து விட்டது. சிசுவின் சடலம் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
பிரேத அறை ஊழியர்கள், சடலத்தை குளிரூட்டிக்குள் வைக்காமல் பொறுப்பற்ற விதத்தில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எலி சடத்தை கடித்து சேதப்படுத்தி விட்டது.
சிசுவின் வலது கண், கன்னம் மற்றும் மூக்கு ப்பகுதிகளை எலி அரித்துவிட்டது. சிசுவின் சடலத்தை பொறுப்பேற்பதற்காக சிசுவின் தந்தை நேற்று வைத்தியசாலைக்கு சென்று, சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார்.
ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்தவர்களுடன் கடமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விடயம் அங்கு விஸ்பரூபம் எடுத்ததையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது.
இந்த விடயம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment