வடமாகாண கல்வி அமைச்சும், யாழ்.வலயகல்வி திணைக்களமும்
இணைந்து யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக்கோரி
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்.கோட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும்
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு
பகுதியாக யாழ்.கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு பாடசாலைகளின் முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் யாழ்.நகரில் ஒன்று கூடி பின்னர் யாழ்.பண்ணை பகுதியில் உள்ள முற்றவெளியில் காலை 10 மணிக்கு நிறைவடைந்தது.
இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு பாடசாலைகளின் முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் யாழ்.நகரில் ஒன்று கூடி பின்னர் யாழ்.பண்ணை பகுதியில் உள்ள முற்றவெளியில் காலை 10 மணிக்கு நிறைவடைந்தது.

No comments:
Post a Comment