ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத்தலைவர்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் பிரபா கணேசன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.முன்னணியின் குழுக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே இணைத்தலைவர்களாக மூவரையும் நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிது காலம் குழுவாக இயங்கிய பின்னர் தலைமைத்துவம் குறித்து முடிவு எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.நேற்றைய கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த இணைத்தலைவரான வீ. ஆனந்த சங்கரி, எமது முன்னணியில் யார் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம். தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிப்படையாக அணுகுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.தமிழ் மக்களின் அரசியல் தீர்வு , மீள்குடியேற்றம், மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் குரல்கொடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment