May 19, 2016

பிரான்சு பாரிஸில் கடும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மிக பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
பிற்பகல் 2.30 மணியளவில் பேரணி புறப்பட்டது. La Chapelle  மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி Rue de Faubourg Saint Denis  ஊடாக Gare de Nord  சென்று Rue La Fayette  வலது பக்க தெருவூடாக திரும்பி பின்பு இடது பக்கமாக Rue de Saint Quentin Clhf Boulevard Magenta  சென்று Gare de l 'est முன்பாக Rue de 8 Mai 1945 ஊடாக சென்று பின்பு Rue du Faubourg Saint Martin  வழியாக Rotonde de la Villette  வழியாக Jaures metro  நிலையத்துக்கு அருகாமையில் Place de la Bataille de Stalingrad இனைச் சென்றடைந்தது. குறித்த பேரணியில் குர்திஸ்தான் மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேரணி சென்ற வழியில் Gare de Nord இல் குர்திஸ்தான் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பேரணி தொடர்ந்துசென்றது. 
Place de la Bataille de Stalingrad  இல் முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் ​- தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றன. 
முதலில் அங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் மகேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் மகளை இழந்த தந்தை ஒருவர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் ஆரம்ப பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் ஆற்றினார்.
தமிழருக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவர் Mme Marie George Buffet Depute de Seine Saint Denis

ஐரோப்பிய குர்திஸ்தான் பெண்கள் அமைப்பு Mme Perevan 
பிரான்சு தமிழீழ ஆதரவு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்
Mme Mireille Guitton Maire Adjoint d’Honneur
ஐரோப்பிய ஆபிரிக்க பெண்கள் அமைப்பின் தலைவர்
Mme Damarys Maa Marchand Chevalier légion d’honneur
மௌரிசியஸ் தமிழ் அமைப்பு சார்பாக Mons Deven Rengasamy 
ஆகியோர் தமது உரைகளில் எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவை உணர்வு பொங்கத் தெரிவித்திருந்தனர்.
தமிழ்ச்சோலை தலைமைப் பணிமனை உறுப்பினர் அகிலன், தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் விவியன் சுபாஸ்கரன், தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை உறுப்பினர் தென்னவள் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றிருந்தன. 
செவ்ரோன் மாணவிகளின் எழுச்சி நடனங்களும் அனைவரையும் கவர்ந்திருந்தன. 
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
ஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.


































No comments:

Post a Comment