June 26, 2015

தீயில் கருகிய மனைவி..! சிக்கலில் கணவன்.!

தீயினில் எரிந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பினில் யாழப்பாணம் காக்கைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இன்று
வியாழக்கிழமை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காக்கைதீவைச் சேர்ந்த சிறிதரன் சாந்தினி (வயது 33) என்பவரே உயிரிழந்தார்.
சந்தேகநபர்கள் கடந்த 20ஆம் திகதி மனைவியுடன் சண்டையிட்டு மண்ணெண்ணெய்யுடன் கூடிய குப்பி விளக்கை மனைவி மீது எறிந்துள்ளார்.
எரிகாயங்களுக்குள்ளாகிய மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை உயிரிழந்தார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளன என்றும் முதல் மனைவி தீயிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவரை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இரண்டாவது தடவையாக திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையினில் முதல் மனைவியின் மரணத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment