February 12, 2015

வடமாகாணசபை தீர்மானம் கூட்டமைப்பி;ன் ஒட்டுமொத்த தீர்மானமே!! பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவிப்பு!

இன அழிப்பு மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பினில் வடமாகாணசபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு சிலரை தவிர கூட்டமைப்பிலுள்ள ஒட்டுமொத்த தரப்புக்களதும் ஆதரவை பெற்றதொரு தீர்மானமே.அத்தீர்மானத்தை வெற்றிகரமாக தொடர்ந்து முன்னெடுக்க நாம் அனைவரும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் க.சுரேஸ்பிரேமச்சந்திரன்.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று வியாழக்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் இது பற்றி தெரிவிக்கையினில் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரேரணையினை வரவேற்றிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதொன்று.எதிர்வரும் காலங்களினில் இணைந்து செயற்படுவதற்கான நம்பிக்கையும் உள்ளது.

இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பினில் தமிழரசுக்கட்சி தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் தற்போது நல்லதொரு சமிக்ஞைகளை காட்டியுள்ளனர்.இது காலத்தின் தேவை.கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பினில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தினுள் கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார்.தொடர்ந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனும் பெயரை தன்னால் தக்கவைக்கமுடியாதென அண்மைய சந்திப்பொன்றினில் தேர்;தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் க.சுரேஸ்பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக கட்சி கொள்கையினை மீறி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயற்பட்டுவரும் தமிழரக்கட்சியின் அரசியல்குழு தலைவர் இh.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தொடர்பினில் கட்சியினில் எழுந்துள்ள அதிருப்தியும் இதற்கு காரணமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். அதற்கு உதாரணமாக அண்மையினில் இலங்கையின் சுதந்திர நிகழ்வினில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டமை மற்றும் அதனையடுத்து எழுந்த எதிர்ப்பலைகளினை அவர் சுட்டிக்காட்டினார்.குறிப்பாக அவாகளது தன்னிச்சையான செயற்பாடுகளினால் அவர்கள் சார்ந்த தமிழரசுக்கட்சி என்பதற்கப்பால் கூட்டமைப்பும் அழுத்தங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாகவும் க.சுரேஸ்பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை வடமாகாணசபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்தியாவிற்கு பாதகங்களை தரமாட்டதென தெரிவித்த அவர் கடந்த காலங்களினில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்களின் போதெல்லாம் தமிழ் மக்கள் இந்தியாவையே ஆதரித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தியா தொடர்பினில் தெற்கினில் எத்தகைய நிலைப்பாடு மாறினாலும் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளினில் தமிழ் மக்களிடையே உள்ள ஆதரவு மனப்பாங்கு மாறதெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment