தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து தென்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் கையெழுத்துப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தீர்மானித்துள்ளது.
அரசியல்வாதிகள், தொழிற்சங்கத்தினர், சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரையும் இணைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும், தமிழ்க்கட்சிகளும் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்துக்கு நீதிமன்றம் மூலம் தீர்வைக் காணமுடியாது எனவும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையின் அவசியம் குறித்த கருத்தை தென்பகுதியில் உருவாக்குவதற்காக இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செப்ரெம்பர் மாத அமர்வுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பாரிய பேரணியை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment