தமிழர் தாயகப் பகுதிகளை பௌத்தமயப்படுத்தும் அரசு மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் நேற்று திங்கட்கிழமை ஆனையிறவு – உமையாள்புரத்திலிருந்து கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்த நடைபயணத்தின் இறுதியில் ஐ.நா. அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.
இந்த நடைபயணத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும், காணாமல்போனவர்களுக்கு நீதி கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமிழர் பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும், தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க வலியுறுத்தியும் இந்த நீதிக்கான நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நடைபயணத்தின் இறுதியில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஜ.நா. அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கான மகஜர் கையளிப்பட்டது.
நடைபயணத்தில் கலந்துகொண்டவர்கள் ‘விடுதலை கோரினால் விஷ ஊசியா?’, ‘நல்லாட்சி அரசா? நயவஞ்சக அரசா?’, ‘நல்லிணக்கத்தின் அடையாளம் அத்துமீறிய புத்தர் சிலையா?’
‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, ‘நீதி வழங்கு நீதி வழங்கு காணாமற்போனவர்களுக்கு நீதி வழங்கு’, ‘இரணைதீவு எங்கள் இதயம்’, ‘வெலிக்கடை, மகஸின், பூஸா தமிழ் இளைஞர்களின் குத்தகை வீடா?’, ‘விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்’, ‘கொள்ளை அடிக்காதே கொள்ளை அடிக்காதே கொக்கிளாயை கொள்ளை அடிக்காதே’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த நடைபயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், காணாமல்போனோரின் உறவுகள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment