July 29, 2016

பிரான்ஸ் லூர்து மாதாவுக்கும் ராணுவப் பாதுகாப்பு!

ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களும் கணிசமான அளவில் யாத்திரை செல்லும் பிரான்சின் பிரசித்தி பெற்ற லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவகாலத்தின் போது ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுமென இன்று அறிவிக்கபட்டுள்ளது.


நேற்று, I.S.ஆயுததாரிகளால் தேவாலய மதகுரு ஒருவர் படுகொலைசெய்யபட்டு ஏனைய மதப்பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஏற்கனவே, லூர்து மாதா தேவாலயத்தின் பாதுகாப்பு காவற்துறையினர் இத்தகவலை உறுதிப்படுத்தியிருப்பதாக பிராந்திய நிர்வாக பணியகம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஆலய வருடாந்த உற்சவத்தின்போது ஆலய வளாகப் பகுதியில் ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் அது அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment