July 27, 2016

ரவிராஜ் கொலை குறித்த வழக்கினை பிரதிவாதிகள் இன்றி விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை குறித்த வழக்கினை பிரதிவாதிகள் இன்றியே விசாரணைக்கு எடுத்துகொள்ள நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.



கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.இந்த கொலை தொடர்பிலான ஆறு சந்தேக நபர்களில் மூன்று சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எனினும் மேலும் மூன்ற சந்தேக நபர்கள் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த வழக்கு எதிர்வரும் செப்டமப்ர் மாதம் 2ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்து.பழனிசாமி சுரேஸ், பெபியன் தியுசன் மற்றும் சேரன் ஆகிய சந்தேக நபர்களே தலைமறைவாகியுள்ளனர்.


இந்த வழக்கு தொடர்பில் ஜூரிகள் தேவையான என பிரதிவாதிகள் அறிவிக்க முடியும் என நீதவான் மனிலால் வைத்தியதிலக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment