July 27, 2016

ரணிலின் அச்சுறுத்தல் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் மௌனம் காப்பது ஏன்? - கூட்டு எதிர்க்கட்சி!

பிரதமர் ரணில் விக்ரமைசிங்கவினால் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்கள் மௌனம் காப்பது ஏன் என கூட்டு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.



பிரதமர் ரணில் விக்ரமசிங்க பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.


ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பதவி விலகத் தவறினால் அவரை பதவி விலக்கும் வழிமுறைகள் தமக்குத் தெரியும் என பிரதமர் கூறியதாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமரின் வார்த்தைப் பிரயோகங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.


கடுமையான தொனியில் ஊடகங்களை பிரதமர் எச்சரித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.


ஜனநயாகத்தை நிலைநாட்டுவதாகவும், ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதாக உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


பிரதமர் ஊடகங்கள் மீது அச்சுறுத்தல் விடுப்பதனை மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் வேடிக்கை பார்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் ஆட்சி செய்வதனால் விமர்சனங்கள் எழுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment