இலங்கையில் திருவள்ளுர் சிலைகள் வைக்கப்படுவதற்கு குறித்து சிங்கள ஊடகம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. “தமிழக கவிஞரான திருவள்ளுவரின் 16 சிலைகளை இலங்கைக்கு கொண்டு வந்து நாடு முழுவதிலும் அவற்றை வைக்க எடுக்கும் முயற்சி பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது.
கொழும்பு, மாத்தளை, ஹட்டன், நாவலப்பிட்டி, புத்தளம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்ப, கட்டைப்பறிச்சான் ஆகிய நகரங்களில் இந்த சிலைகள் வைக்கப்பட உள்ளன.
தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனினும் இது குறித்து மக்களினதோ மாகாணசபைகளினதோ கருத்து கோரப்படவில்லை. தமிழகத்தின் விஜிபி என்ற நிறுவனமே இந்த சிலைகளை வழங்குகின்றன. இந்த சிலைகளுக்கான சுங்கத்தீர்வையை யார் செலுத்தினார்கள் என்பது இதுவரையில் தெரியவரவில்லை என சிங்கள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment