July 29, 2016

இலங்கையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்: - கனடா !

இலங்கை விவகாரத்தில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பிற்கு ஆதரவளிக்கப்படும் என கனடா தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைமையை உருவாக்கும் முனைப்புக்களில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பு அவசியமானது என தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் Stéphane Dion இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியனவற்றை உருவாக்குதவற்கு இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் கனடா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மின்விநியோகம், கப்பல்துறை, தொழில்நுட்பம், உட்கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment