தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பொருண்மிய மேம்பாட்டு க்கழகத்தால்உருவாக்கப்பட்ட தேக்கு மரக்காடுகள் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தால்அழிக்கப்படுகின்றன.
அடுத்த சந்ததியினரின் காதுகளுக்கு எமது வரலாற்றைக் கொண்டுசெல்வதற்காவது இந்தக் காடுகளைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஒட்டுசுட்டான் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்டமுல்லைத்தீவு - மாங்குளம் வீதியில், 9ம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ளதேக்கு மரக்காடுகள் தற்போது வேகமாக அழிக்கப்படுகின்றன.
இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்ததாவது,
இந்த மரங்கள் ஏன் அழிக்கப்படுகின்றன, எதற்காக அழிக்கப்படுகின்றன என்பதுதெரியவில்லை. தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. வனவள பாதுகாப்புத்திணைக்களத்தினரே பெருவாரியாக அழித்து வருகின்றனர்.
காடுகளை அழிக்கும் இவர்கள் தேக்கம் குற்றிகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டுசெல்கின்றனர். அவற்றை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை.
வனவள பாதுகாப்பு என்ற போர்வையில் அழிக்கப்படும் இந்தக் காட்டின் வரலாறுகளையாரும் அறிந்திருக்கமாட்டார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் இதற்கு அனுமதிவழங்கியிருக்கமாட்டார்கள்.
எமது இனத்தின் காவலர்களால், தமிழீழவிடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் சூழலுக்கு நன்மைபயக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டவைகளே இவை.
இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து இந்த தேக்கம் காடுகள் அனைத்தும்அழிக்கப்பட்டு வெறும் நில மாக இந்த மண் காணப்படும்போது எமதுசந்ததிகளுக்கு வரலாற்றைக் கூறமுடியாது.
எமது போராட்ட வரலாற்றுப் பொக்கிசங்கள்அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. நாம் ஆண்ட மண் என்று சொல்வதற்கு இங்கு எதுவுமேஇல்லை.
அடுத்த சந்ததியினரின் காதுகளுக்கு எமது வர லாற்றைக் கொண்டுசெல்வதற்காவது இந்தக் காடுகளைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு எமது மக்கள்பிரதிநிதிகள் முன்வரவேண்டும்.
ஒரு மரத்தை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு சென்றால் அதற்குத் தண்டப்பணம்,சிறை என்று ஏகப்பட்ட சட்டங்களை வகுத்திருப்போர் வனவள திணைக்களத்தால் ஒரு காடேஅழிக்கப்படுவதற்கு என்ன நட வடிக்கை எடுக்கப்போகின் றார்கள்? என்று கேள்விஎழுப்பினர்.
தற்போது அந்தப் பகுதியில் உள்ள தேக்க மரங் கள் உரிய வளர்ச்சியை அடைந்துள்ளன.அவற்றை அழித்து அந்த இடத்தில் புதிதாக மரங்கள் நடப்படவுள்ளன.
தேக்க மரங்கள்சந்தைப்படுத்தக் கூடிய இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது வழமையாகச்செய்யும் செயற்பாடே என்று முல்லைத்தீவு மாவட்ட வன வளப் பாதுகாப்புத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment