June 14, 2016

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதலீடாக புதிய சட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அரசாங்கம் மூன்று புதிய சட்டங்களை அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளது.


தேசிய பாதுகாப்புச் சட்டம், திட்டமிட்ட குற்றச் செயல் சட்டம் மற்றும் புலனாய்வுச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் மீளவும் பயங்கரவாதம் ஏற்படுவதனை தடுத்தல், இன சமூகங்களுக்கு இடையில் சகோதரத்துவத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக இந்த புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டங்கள் இன்னமும் முழுமை பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment