June 14, 2016

இலங்கை குறித்­த அறிக்­கையை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம் : ஜெனி­வாவில் ஐரோப்­பிய ஒன்­றியம் !

இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை கள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர்­பார்­த்தி­ருக்­கின்றோம்.
அதன் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­னது. அதில் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 47 உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் அனை­வரும் நேற்­றைய தினம் அமர்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நிதி அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாடுகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆண­யைா­ளரின் மதிப்­பீ­டு­களை பார்க்­கின்றோம். இதற்­காக அவ­ருக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். மேலம் இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் வாய்­மூலா அறிக்­கையை நாங்கள் எதிர்­பார்­தி­ருக்­கின்றோம்.

அவர்ங அறிக்­கையை முன்­வைத்த பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்றார்.

நேற்று ஆரம்­ப­மான கூட்டத் தொடர் எதிர்­வரும் ஜூலை மாதம் முதலாம் ஆம் திகதி வரை நடைபெறும். எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை வெளியிடப்படும்.

No comments:

Post a Comment