கொஸ்கம இராணுவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதன் எதிரொலிப்புக்கள் இன்னும் அடங்கவில்லை.
அந்த இராணுவ முகாமைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்கள் தம்மை பழைய இடங்களில் குடியமர்த்துமாறு தொடர்ந்தும் வீதியை மறித்து போராடி வருகின்றார்கள்.
அகதி முகாம்களில் வசதி குறைபாடுகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் கல்வியை தொடர்ந்தாலும், கல்வி கற்கும் இயல்பை அந்தப் பிள்ளைகள் பெற்றுவிடவில்லை.
தொழிலுக்குச் செல்வோருக்கும் இதேநிலைதான். இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து தவிர்க்க முடியாத நெருக்கடியை தம்மீது சுமத்தி இருந்தால் அதை அந்தமக்கள் ஜீரணித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இராணுவத்தினரினதும், இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளற்ற அரசின் செயற்பாடுகளினாலும் தாம் பாதிக்கப்பட்டு அகதிகளாகி இருப்பதை கொஸ்கம பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த 5ஆம் திகதி சாலாவ இராணுவ முகாமுக்குள் மாலை 5.32 மணிக்கு சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டபோது அந்த முகாமின் சுற்றுப் புறத்தில் வாழ்ந்த மக்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. வழமையாக சில துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதைப்போல், இன்றும் கேட்பதாக நினைத்தார்கள்.
சிறிது நேரத்தின் பின்னர், இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று உடனடியாக எடுக்கக்கூடிய ஆவணங்களையும், பொருட்களையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தூரப் பகுதிக்குச் செல்லுமாறு மக்களை அறிவுத்தினார்கள். இராணுவத்தினரின் எச்சரிக்கையை அடுத்து அந்தப் பகுதி மக்கள் கத்திக் கொண்டு ஓடினார்கள்.
இராணுவ முகாமுக்கு உள்ளே இருந்து வெடிப்புச் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியபோது, பெரும் தீச்சுவாலைகள் மேல் எழுந்தன, ஆகாயத்தை நோக்கி புகை மண்டலமாக காட்சியளித்தது.
விடுதலைப் புலிகள் இராணுவமுகாமைத் தாக்குவதாகவே அந்தப் பகுதி மக்கள் முதலில் நம்பினார்கள். ‘கொட்டிஆவா….கொட்டிஆவா….’ என்று அதாவது ‘புலிகள் வந்துவிட்டார்கள்…. புலிகள் வந்துவிட்டார்கள்’ என்று கத்திக்கொண்டு ஓடியவர்கள் ஆங்காங்கே திரண்டு நின்று முகாமிலிருந்து வெளியேறுகின்ற சத்தங்களையும், தீப்பிளம்புகளையும், புகையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் இரவு 8 மணியை எட்டியிருந்தபோது களஞ்சியம் முழுமையான பாதிப்புக்கு முகம் கொடுக்கத் தொடங்கியிருந்தது. ஏறிகணைகள் முகாமிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறி அயலில் இருந்த பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியது. அப்போதுதான் மக்கள் ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்தார்கள்.
வானவேடிக்கை போல் எறிகணைகள் முகாமைச் சுற்றி நாளா பக்கமும் சீறிப் பாய்ந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கியது. சுமார் ஆறு கிலோமீற்றருக்கு அந்த எறிகணைகள் பாய்ந்து வரக்;கூடும் என்று இராணுவத்தினர் அஞ்சினார்கள். ஆகவே மக்களை 9 கிலோ மீற்றர்களுக்கும் அப்பால் இருப்பதே பாதுகாப்பானது என்று அறிவித்தார்கள்.
சாலாவ ஆயத வெடிப்புச் சத்தம் 9 கிலோ மீற்றருக்கு அப்பாலும் கேட்டது. முகாமைச் சுற்றிய 2 கிலோமீற்றர் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகின. யுத்தம் நடந்ததைப்போல் அந்த சுற்று வட்டாரமே சிதைந்து போனது. ஒரு இராணுவச் சிப்பாய் உட்பட 8 பேர் உயிரிழந்தார்கள். 42பேர் காயங்களுக்கு உள்ளானார்கள். 12 கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள்.
வெடித்த குண்டுச் சிதறல்களை யாரும் தொடவேண்டாம் என்று படையினர் எச்சரித்திருந்தார்கள். முகாமைச் சுற்றி இரண்டு கிலோ மீற்றர் தூரத்துக்குள் எவரும் குடியேற வேண்டாம் என்றும், மூடப்படாத கிணறுகளிலிருந்து தண்ணீரைப் பாவிக்கவேண்டாம் என்றும் இராணுவம் எச்சரித்தது.
புகையும், வெடி பொருட்களின் சாம்பலும் அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலை பெரிதும் பாதித்திருந்தது. சாலாவ முகாமைச் சுற்றி 1 கிலோ மீற்றருக்குள் இருந்த வீடுகள், வர்த்தக நிலையங்களும் முற்றாக அழிந்து போயிருக்கின்றன.
தற்காலிக முகாம்களில் இருப்பவர்களுக்கும், வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கும் முதற் கட்டமாக 50,000ரூபா உதவித் தொகையை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இழப்புக்கள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டைச் செய்வதற்கு 76 பேர் கொண்ட குழுக்களை அரசாங்கம் நியமித்துள்ளது.
இவர்கள் 12 கிராமசேவையாளர் பிரிவுகளையும் உள்ளடங்கியவாராக விசாரணைகளை நடத்தி தமது மதிப்பீட்டு அறிக்கையைச் செய்கின்றார்;கள்.
படையினர் தொடர்ந்தும் அப்பகுதியைச் சுற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுவரை 80 வீதமான சிதறல்களையே படையினர் மீட்புச் செய்துள்ளனர்.
இதுவரையான தரவுகளின்படி ஆயுதக் களஞ்சிய வெடிப்பு காரணமாக 500 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதும் இழப்புத் தொகை மேலும் அதிகமானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வெடி பொருட்கள் ஏற்படுத்திய இழப்புக்களுக்கு மேலதிகமாக 645 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 200 கட்டிடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்பு இடம்பெற்றது தொடர்பாக புலனாய்வு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது. அந்த முகாமின் கடமையில் ஈடுபட்டிருந்த 50க்கும் அதிகமான சிப்பாய்களிடம் இதுவரை விசாரணைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விடுமுறையில் சென்றவர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.
இந்த ஆயுதக் களஞ்சியத்தை அனுராதபுரத்திலுள்ள ஓயமடுப் பகுதிக்கு இடமாற்றம் செய்யுமாறு முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகளான ஜெகத் ஜெயசூரிய மற்றும் தயாரட்ணாயக்க ஆகியோருக்கு கூறியிருந்தபோதும் இறுதிநேரத்தில் நடந்த ஆட்சி மாற்றம் காரணமாக ஆயுதக் களஞ்சியத்தை இடமாற்றும் வேலைகள் தடைப்பட்டுப் போய்விட்டது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இராணுவத் தரப்புக்குமிடையே இடைவெளிகளும், அதிருப்த்திகளும் தொடர்வதால் முன்னைய ஆட்சியில் இராணுவம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளையும், இராணுவத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களையும் நேரடியாக அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
ஜனாதிபதியோ, பிரதமரோ படையினருக்கு உத்தரவுகளை இடுகின்றார்களே தவிர படையினருடன் நெருக்கமான தொடர்பில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படைத்தரப்பும் திருப்தியற்ற மனோ நிலையில் அரசாங்கத்தின் உத்தரவுகளை எதிர்பார்த்து இருப்பதுடன் மட்டும் இருக்கின்றார்கள்.
முன்னைய ஆட்சியின்போது அரசுக்கும், படைத்தரப்புக்குமிடையே இவ்வாறான இடைவெளிகள் இல்லாமல், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ஒரு பாலமாக இருந்தார். அந்த அந்நியோன்னியம் இப்போது இல்லை.
படையினரை கோட்டபாயவின் விசுவாசிகள் என்றும், மஹிந்தவின் விசுவாசிகள் என்றும் நல்லாட்சி அரசாங்கம் கருதுவதும், வடக்கு கிழக்கிலிருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விடுவிக்க அரசு முடிவு செய்வதும், படையினருக்கான சலுகைகளில் அரசு தலையீடு செய்வதும், படையினருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.
இந்த நிலையிலேயே போர் இல்லாத சூழலில் ஏற்படுகின்ற போர் விமான விபத்துக்கள், ஆயுதக் களஞ்சிய வெடிப்புக்கள், போன்ற சம்பவங்கள் தவறுதலானவையா? அல்லது திட்டமிட்ட சதிகளா? என்ற சந்தேகங்கள் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது.
சிறிய சிறிய சம்பவங்களை தவிர்த்து சாலாவ ஆயுதக் களஞ்சியசாலையில் இடம் பெற்ற வெடிப்பும் சதியாக இருக்குமா? என்ற கோணத்திலும் அரசாங்கம் சிந்திக்கின்றது.
ஏன் என்றால் அங்கு இருந்த ஆயுதங்கள் ஏற்கெனவே சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டவை என்பதால், மேலதிகமான அந்த ஆயுதங்களை களஞ்சியப் படுத்தாமல் சீன நிறுவனம் ஒன்றுக்கே விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தது.
அதன்படி சீனாவின் நொறிங்கோ எனும் நிறுவனத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்வதற்கு, லங்காலொஜிஸ்ரிக் அன்ட் ரெக்னோலொஜி எனும் நிறுவனத்தினூடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அந்த ஆயுதங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளன.
சாலாவ ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக பார்க்க வேண்டிய மற்றுமொரு விடயமும் இருக்கின்றது. அந்த வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் பிரதமர், அமைச்சர்கள் என பலரும் அங்கு சென்று அழிவுகளை பார்வையிட்டும், இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டும் வருகின்றனர்.
அந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த வீடுகளைப் போலவே புதிய வீடுகள் அரசாங்கத்தினால் கட்டிக் கொடுக்கப்படும் என்றும், இலவச மின்சாரம், இலவச குடிநீர் வசதி, என எதையெல்லாம் அப்பகுதி மக்கள் இழந்தார்களோ அத்தனையையும் அரசாங்கமும் இராணுவமும் அப்படியே பெற்றுத் தரும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.
சாலாவ வெடி விபத்தைவிடவும் பல மடங்கு அதிகமான வெடிப்புகளையும், அனர்த்தங்களையும் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.
தமது உறவுகளை இழந்திருக்கின்றார்கள், தமது வாழ்க்கையையும், வாழ்ந்த வீடுகளையும், இடங்களையும் இழந்திருக்கின்றார்கள். இன்னும்கூட அகதி முகாம்களிலும் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் இத்தனை துயரங்களையும், அவலங்களையும் நீடித்த அகதி முகாம் வாழ்க்கையையும் மனிதாபிமானமாகவும், அரசியல் ரீதியாகவும் இலங்கை அரசாங்கங்கள் அணுகவில்லை. அதற்குக் காரணம் என்ன? அங்கே அழிந்தது தமிழர்கள் என்பதாலா? என்பதைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கமுடியும்.
மஹிந்த அரசும், மைத்திரி அரசும் சிங்களத் தலைமைகளாக இருந்து கொண்டுதான் தமிழ் மக்களை பார்க்கின்றனவே தவிர, இலங்கைக் குடிமக்களின் நடுநிலையான ஜனாதிபதியாக இருந்து கொண்டு பார்க்கவில்லை. அழிந்துபோன தமிழ் மக்களின் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலங்கை அரசுகள் ஒருபோதும் முன்வரவில்லை.
இந்திய உதவியூடாகவும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களூடாகவுமே தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அகதி முகாம்களில் இருப்பவர்களுக்கு வாடகைக் கொடுப்பனவு தமிழர்களுக்கு இல்லை. வாழ்ந்த வீடுகளைப்போல் வீடுகளை அமைத்துத் தராவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்த நிலங்களையாவது மீண்டும் ஒப்படைக்க அரசும், படைகளும் விரும்பவில்லையே..!
சாலாவ வெடிப்பு ஏற்படுத்திய அழிவு வலியை உணர்ந்து கொண்டிருந்தால் அரசுக்கும், படையினருக்கும் தமிழ் மக்களின் வலிகளும் புரிந்திருக்கும்.
அரசுக்கும் படையினருக்கும் சாலாவ வலிகள் தெரியாவிட்டாலும், அதில் உயிர்ச் சேதமில்லாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு கிழக்கில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எத்தகைய வலியை, இழப்பை, பதற்றத்தை, ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்திருக்கும் என்று நம்புவோம்.

No comments:
Post a Comment