June 24, 2016

பிரிகிறதா பிரித்தானியா? நேரடி ரிப்போட்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவினைக் காண இணைந்திருங்கள்
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது கிட்டத்தட்ட
முடிவாகியுள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தை சுற்றிலும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என கத்திக் கொண்டே நபர் ஒருவர் வாகனத்தில் இருமுறை வலம்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கனடா எம்பி Jason Kenney, கூறுகையில் “பிரித்தானிய மக்களின் முடிவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும், கனடா- பிரித்தானியா இடையிலான சுதந்திரமான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என டுவிட் செய்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது: Nigel Farage பெருமிதம்
319 வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில்,
Remain: 102 – வாக்குகள் 12,991,972 (48.4%)
Leave: 217 – வாக்குகள் – 13,842,109 (51.6%)
Northern Ireland-ல் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்துள்ள நிலையில், 440,437 இணைந்திருக்க வேண்டும் எனவும், 349,442 பேர் வெளியேற வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.
வெற்றி கொண்டாட்டத்தில்,
ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.
ஸ்காட்லாந்து 1,661,191 பேர் இணைந்திருக்க வேண்டும் எனவும், 1,018,322 பேர் வெளியேற வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.
வேல்ஸில் 772, 347 பேர் இணைந்திருக்க வேண்டும் எனவும், 854,572 பேர் வெளியேற வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுகிறது பிரித்தானியா? நேரடி பதிவினை காண இணைந்திருங்கள்
www.pathivu.com
தற்போதைய நிலவரப்படி 12,171,217 பேர் வெளியேற வேண்டும் எனவும், 11,456,591 பேர் இணைந்திருக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.
NATION LEAVE REMAIN
England 10,094,524 8,770,135
Northern Ireland 330,783 408,744
Scotland 917,003 1,540,882
WAles 828,907 736,830
June 24, 20161 hour ago
“பெரும்பாலான மக்கள் வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர், இது ஐரோப்பிய யூனியன் மீதான் மக்களின் கோபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது” Chris Griffiths (Councillor for the Conservatives)
217 வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில்,
Remain: 69- வாக்குகள் 8,042,118 (48.5%)
Leave: 148- வாக்குகள் 8,544,442 (51.5%)
பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகினால், பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலக வேண்டும் என Shadow Foreign Secretary Hilary Benn தெரிவித்துள்ளார்.
Eastleigh-ல் 47.5 சதவிகிதம் பேர், Cotswold-ல் 51.1 சதவிகிதம் பேர், Hackney-ல் 78.5 சதவிகிதம் பேர், Kensington and Chelsea-ல் 68.7 சதவிகிதம் பேர், Hounslow-ல் 51.1 சதவிகிதம் பேர் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர்
வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்ஷன்களை செலக்ட் செய்திருந்தாலும், தெளிவான முறையில் தங்கள் வாக்கினை பதிவு செய்யாமல் இருந்தாலும் குறித்த வாக்குசீட்டுகள் நிராகரிக்கப்படுகின்றன, தற்போதைய நிலவரப்படி 11,808 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன
பிரித்தானியா விலகாது என நம்பிக்கையுடன் இருந்த ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன்
தொழிலாளர் கட்சியை பொறுத்த வரையில் பிரித்தானியா விலகும் என கணித்துள்ளது, இது ஒருவேளை நடந்து விட்டால் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலக வேண்டும் என Jeremy Corbyn அழைப்பு விடுப்பார் என தெரிகிறது, இருப்பினும் கமரூன் தானாகவே முன்வந்து பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment