வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பழையவாடி எனும் பழம் பெரும் தமிழ் கிராமத்தில் சிங்கள பாராம்பரிய நடனத்தை பெண்கைள கொண்டு ஆடவைத்து வட மாகாண ஆளுனரை மகிழ்வித்துள்ளார் வவுனியாவை சேர்ந்த பிரபல வர்த்தகர்.
இந்திய தூதரகத்தின் அனுசரணையுடன் பழையவாடி கிராமத்தில் மதுரை மல்லிகையினை தோட்டமாக செய்ய முயற்சிகள் மேற்கொண்டு நேற்று மாதிரி பண்ணை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
வட மாகாண விவசாய அமைச்சிற்கு தெரிவிக்கப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இவ் விவசாய பண்ணையில் வட மாகாண ஆளுனர், இந்திய துணைத்தூதர் நடராஜ், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ரோகண கமகே ஆகியோர் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் அங்கு வந்தவர்களை மகிழ்விப்பதற்காக நாதஸ்வர இசையுடன் சிங்கள பெண்களை வரவழைத்து நடனமாடி மகிழ்விக்கப்பட்டுள்ளது.
இது தெர்டர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்ததுடன், தமிழ் கிராமத்தில் தமிழர் பாராம்பரியத்தை பறைசாற்றும் நடனங்களை விடுத்து தமிழர் ஒருவர் தமிழர் கலாசாரத்தை தரம் குறைத்துள்ளமையையிட்டு கவலை தெரிவித்தனர்.
இதேவேளை இந்து மக்கள் வாழும் இக்கிராமத்திற்கு இந்து மத குரு ஒருவரும் வரவழைக்கப்படாமையினையும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment