நாடாவை வெட்டிய இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சம்பவம் கடவத்தையில் இடம்பெற்றுள்ளது.கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு
பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு ஜயவேவா' என்றும் கோஷமிட்டுள்ளார்.
அவ்வாறு கோஷம் எழுப்பிகொண்டுவந்த பெண்கள் இருவரும் மஹர தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பேரே அடிக்கப்பட்டு, நடன கலைஞர்களின் நடனத்துடன் வந்துகொண்டிருந்தபோதே, அந்த பெண்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த கைப்பைக்குள் இருந்த கத்தரியை எடுத்து திடீரென நாடாவை வெட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment