July 28, 2016

ரூபவாகினியுடன் கைகோர்த்தது ஐ.பி.சி – வெளிவந்தன திடுக்கிடும் புகைப்படங்கள்!

சிங்கள அரசின் தேசிய ஊடகமான ரூபவாகினியின் சகோதர ஊடகமாக ஐ.பி.சி மாறிவிட்டதா? என்று எண்ணும் வகையில் அதனுடன் இணைந்து ஐ.பி.சி செய்தி சேகரித்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 27.01.2016 அன்று ஐ.பி.சி வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தியின் காணொளியிலேயே இந்தத் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதில் அரசியல் கைதி ஒருவரை மூன்று ஊடகங்கள் செவ்வி காண்கின்றன. ஒன்று News First எனப்படும் சக்தி தொலைக்காட்சி. மற்றையவை இரண்டும் ஐ.பி.சி, ரூபவாகினி ஆகியவையாகும். இவற்றில் சக்தி தொலைக்காட்சியின் ஒலிவாங்கியை ஒருவர் கையில் பிடித்துள்ளார்.
மறுபுறத்தில் ஐ.பி.சி, ரூபவாகினி ஆகியவற்றின் ஒலிவாங்கியை இன்னொருவர் (ஐ.பி.சியின் செய்தியாளரா? அல்லது ரூபவாகினியின் செய்தியாளரா? என்பது தெளிவாக இல்லை) பிடித்துள்ளார்.


இதன் மூலம் சிங்கள அரசின் தேசிய ஊடகமான ரூபவாகினியுடன் நெருக்கமான உறவை ஐ.பி.சி பேணுவதும், அதன் சகோதர ஊடகம் போன்று செய்தி சேகரிப்பதும் அம்பலமாகியுள்ளது.
இனவெறியும், கொலைவெறியும் பிடித்த சிங்களப் படைகளுக்கு வெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஏலவே தனது சுயரூபத்தை வெளிப்படுத்திய ஐ.பி.சியின் சிங்களத்துடனான தேனிலவை உறுதிசெய்யும் ஆதாரமாகத் தற்பொழுது இந்தப் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

No comments:

Post a Comment