July 28, 2016

உடல் மட்டும் இலங்கைக்குரியது!

நாட்டை ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை சீர்குலைத்ததால், தற்போது மக்களுக்கு தேவையான பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இதனால், வருடாந்தம் பெருந்தொகை பணம் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வீதியில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை பார்த்தால், அவர் தலையில் பூசும் எண்ணெய், பின், சேலை, பாதணி, கைக்கடிகாரம் என அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தமை. உடல் மட்டும் இலங்கைக்குரியது.

பால் மாவை இறக்குமதி செய்ய 34 கோடி டொலர், சீனியை இறக்குமதி செய்ய 25 கோடி டொலர் மிளகாய் இறக்குமதி 6 கோடி டொலர், வெங்காயத்தை இறக்குமதி செய்ய 4 கோடி டொலர் பாசி பயறு இறக்குமதிக்கு 70 லட்சம் டொலர், இவ்வாறு இலங்கையின் பணம் வருடாந்தம் வெளிநாடுகளுக்கு செல்கிறது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment