கதிர்காமம் புனித பூமியில் ஆபத்தான ஆயுதங்களுடன் நடமாடும் யாசகர்கள் காரணமாக பக்தர்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கதிர்காமம் தேவாலய பூமியில் சுற்றத்திரியும் இந்தக் கும்பலில் ஐந்து
ஆண்களும் , சில பெண்களும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
ஆண் யாசகர்களிடம் கட்டாரி, சூலாயுதம், வேல், வெடிமருந்து நிரப்பிய பைப்கள் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சிற்சில தருணங்களில் கடுமையான கோபத்துடன் காணப்படும் இந்த யாசகர்கள் தங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முயலும் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர்.
அத்துடன் தமக்கு தெய்வீக அருள் இருப்பதாக பக்தர்களை நம்பவைக்கும் இக்குழுவினர், பக்தர்களுக்கும் அச்சுறுத்தலான வகையில் தமது ஆயுதங்களைக் காட்டி மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் கதிர்காம தேவாலய பரிபாலன சபையின் செயலாளர் அனுருத்த ஏக்கநாயக்க, இவர்களை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது போனால் பொதுமக்களுக்கு ஆபத்துகள் ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment