கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் யுத்தத்தினால் அழிவடைந்த புனித ஆரோக்கியமாதா தேவாலயத்தின் திருச்சுருவத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கடந்த யுத்த காலத்தின் போது மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட முகமாலையின் அடையாளமாகக் காணப்பட்ட முகமாலை புனித ஆரோக்கியமாதா ஆலயம் முழுமையாகச் சேதமடைந்து காணப்பட்டது.
2010ம்ஆண்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டதும் முகமாலைப்பகுதியின் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் இப்பகுதியில் இதுவரை குறிப்பிட்ட சில பகுதிகள் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதிகளாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் முகமாலைப்பகுதியின் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் திருச்சுருவத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (27-07-2016) பகல் 9.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இதில் ஆலயப்;பங்குத்தந்தை பங்கு மக்கள் அரசஅதிகாரிகள் பொதமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment