July 1, 2016

இலங்கை சில முக்கிய விடயங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது – HRW!

இலங்கை சில முக்கிய விடயங்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.



ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த சில முக்கிய வாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த சில முக்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்து செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்பட்ட வகையில் சட்டம் இயற்றப்படும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து  சர்வதேச நீதவான்கள்,வழக்குரைஞர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.


எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு நீதவான்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் இடமில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. எந்தவொரு நீதிப் பொறி முறைமையும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை உள்ளீடு செய்வதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment