யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் சினிமா பாணியில் யுவதியொருவர் கடத்தப்பட்டுள்ளார். வெளிநாட்டு வாலிபர் ஒருவரை மறுநாள் பதிவுத் திருமணம் செய்யவிருந்த நிலையில், பேரூந்திற்குள் வைத்து யுவதியை அலோக்காக வாலிபர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார்.
சுழியுரம் சந்திப்பகுதியில் நேற்று பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து யுவதியின் பெற்றோர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
மூளாயை சேர்ந்த குறித்த யுவதிக்கும் கனடாவை சேர்ந்த ஒருவருக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவுத்திருமணம் நடைபெற இருந்தது. பதிவுத் திருமணத்தின் முன்னர், நேற்று சனிக்கிழமை யுவதியும் உறவுக்கார பெண் ஒருவருமாக யாழ்.நகருக்கு பொருட்கள் வாங்கும் நோக்குடன் பேருந்தில் சென்றுள்ளனர்.
மூளாய் வீதியூடாக பேருந்து சென்று சுழிபுர சந்தியை அண்மிக்கும் போது பேருந்து சாரதி வீதி ஓரமாக பேருந்தை நிறுத்தி சில நிமிடங்கள் தொலை பேசியில் உரையாடியுள்ளார்.
அந்த சமயத்தில் முச்சக்கரவண்டியொன்று பேரூந்திற்கு சமீபமாக வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய வாலிபர் ஒருவர் பேரூந்தில் ஏறி பெண்ணின் கையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றுள்ளார்.
அதனை பேருந்து சாரதி நடத்துனர் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அச் சம்பவம் குறித்து யுவதியின் பெற்றோரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலிற்கும் பேரூந்து சாரதிக்குமிடையில் தொடர்பிருப்பதாக பொலிசாரும் நம்புகிறார்கள்.

No comments:
Post a Comment