June 22, 2015

போதைப்பொருள் கடத்தல்: பிரான்ஸ் நபரை தூக்கில் போடும் இந்தோனேஷியா!

மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிரான்ஸ் நாட்டவரின் இறுதி கோரிக்கையை இந்தோனேஷிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட 9 வெளிநாடுகளை சேர்ந்த
10 நபர்களை போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 2005ம் ஆண்டு இந்தோனேஷிய பொலிசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தியது உறுதியானதால், 10 கைதிகளுக்கும் கடந்த 2008ம் ஆண்டு மரண தண்டனை விதித்து இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பிற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது, இதனை தொடர்ந்து, பிரான்ஸ் குடிமகனின் மரண தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக இந்தோனேஷிய அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு, பிரான்ஸ் குற்றவாளி செர்ஜே சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவை ஜனாதிபதி நிராகரித்துவிட்டதையடுத்து, தனது மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் செர்ஜே மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜனாதிபதியின் முடிவை ரத்து செய்ய முடியாது என நேற்று(21 ஆம் திகதி) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து விரைவில் அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேஷியிவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 2 நபர்கள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment