March 4, 2015

தூக்கிலிடப்பட்டார் சுமந்திரன்! தண்டனை வழங்கியது கூட்டமைப்பு இளைஞரணி!

தமிழினத்தின் துரோகியே, தமிழரின் தியாகங்களை மறந்த நன்றி கெட்டவனே என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்து,வாசகங்கள் எழுதப்பட்ட உருவப்பொம்மைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகர் பகுதியென பரவலாக இந்த உருவப்பொம்மைகள் நேற்றிரவு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததடன் வாசகங்களுக்கு கீழே தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி என்று உரிமை கோரப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு இளைஞரணியினை சேர்ந்தவர்களென தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இளைஞர் குழுக்களில் 30 பேர் முதல் 40 பேர் வரையிலிருந்தனர் எனவும் துரோகிகளை இந்த வீரமண் மன்னிக்காது, மக்களது உணர்வுகள் புரியாதவர்களா தலைவர்கள்? தன்மான இனத்தை விற்காதேயென தமிழரசுக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக அவர்கள் கோசங்களை எழுப்பினர் என உருவப்பொம்மை தொங்கவிடப்பட்ட பகுதி மக்கள் தெரிவித்தனர்.
1          sumanthairan_hang_102
வடமராட்சியில் கரவெட்டி, மூத்தவிநாயகர் கோவிலடியில் சுமந்திரனினது அலுவலகமென திறக்கப்பட்ட தமிழரசுக்கட்சி அலுவலகம், கைதடியிலுள்ள வடமாகாணசபை வளாகம், யாழ்.நகரில் மார்டின் வீதியினில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகம் ஆகிய இடங்களிலேயே சுமந்திரனின் உருவப்பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
இதேவேளை, கடந்த 21ம் திகதி காணாமல்போனவர்களின் உறவினர்கள் யாழில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதுடன் புலம்பெயர் தேசங்களிலும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் படங்கள் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment