March 4, 2015

தமிழின அழிப்புக்கு நீதி கோரும் விடுதலைச் சுடர் யேர்மன் தலநகரை வந்தடைந்தது .

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி பயணிக்கும் விடுதலைச் சுடர் கடந்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பல நாடுகளை கடந்து தொடர்ந்து கடந்த சனிக்கிழமை யேர்மன் நாட்டுக்குள் பிரவேசித்து பல நகரங்களை கடந்து இன்றைய தினம் Hamburg நகர
உணர்வாளர்கள் , பேர்லின் நகர உணர்வாளர்களிடம் கையளித்தனர்.
பேர்லின் நகரில் பிரபல்யமான Brandenburger Tor திடலில் பேர்லின் மக்களால் கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. நிகழ்வில் ஆரம்பத்தில் பொதுஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. விடுதலைச் சுடர் ஊடாக பல்லின மக்களிடம் எமது மக்களுக்கான நீதியை நிலைநிறுத்தும் வகையில் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாதைகளை தாங்கியவாறும் இளையோர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சுடர் பயணத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகளிடம் சந்திப்புகள் கேட்கப்பட்டு இருந்தும் பாராளுமன்ற முக்கிய அமர்வுகளின் காரணத்தால் அதுக்கான வாய்ப்புகள் தராத நிலையிலும் யேர்மன் மனிதவுரிமை ஆணையாளரால் Christoph Strässer விடுதலைச் சுடரின் நோக்கம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துச் செய்து கிடைக்கப்பெற்றது . அத்தோடு பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு Nouripour அவர்களும் இடதுசாரி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Annette Groth அவர்களும் வரும் நாட்களில் பாராளுமன்ற விவாதத்தில் இலங்கை தொடர்பாக கேள்விகள் எழுப்புவதாக உறுதியளித்துள்ளனர் .
விடுதலைச் சுடர் நாளைய தினம் Hannover நகரத்துக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.











No comments:

Post a Comment