June 14, 2016

எமது இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற பயம்!

பெரும்பாண்மையின அரசியல் வாதிகளிற்கு ஓர் சூழல் இருக்கின்றது. அந்த சூழல் என்பது எமது இளைஞர்கள் தனிநாட்டிற்காக போராடினார்கள் திரும்பவும் அவ்வாறு போராடக்கூடும் என்ற சந்தேகமே அந்த சூழல் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது உருவாக்க என்னும் அரசியல் யாப்பானது சிறந்த அரசியல் யாப்பு அல்ல சூழலுக்கேற்ப ஓர் சிறந்த அரசியல் யாப்பு என அரசியல் யாப்பு உருவாக்க குழுவின் தலைவர் ஜெயம்பதி விக்ரமரட்ணா தெரிவித்திருப்பது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பெரும்பாண்மையின அரசியல் வாதிகளிற்கு ஓர் சூழல் இருக்கின்றது. அந்த சூழல் என்பது எமது இளைஞர்கள் முன்பு தனிநாட்டிற்காக போராடினார்கள் .
திரும்பவும் அவ்வாறு போராடக்கூடும் . அதனை வெளிநாடுகளின் அனுசரனையுடன் செய்தாலும் செய்வார்கள் என்ற அவர்களின் சந்தேகமும் பயமுமே அந்த சூழல் ஆகும்.
இதனை மையம்கொண்டே அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . ஆனால் எம்மைப்பொறுத்த மட்டில் எமது மனதில் நாங்கள் திடமாக இவ்வாறுதான நடக்கப்போகின்றோம் என்று கூறுவதையும்  மதிக்கவேண்டும் .
சந்தேகம் எலாமல் இருக்க வேண்டும். என்றே நாம் எதிர்பார்க்கின்றோம். இவைகள் எல்லாமே சூழல்தான் . ஆகவே அனைத்திற்கும் மத்தியில் ஓர் நல்ல யாப்பினை உருவாக்க வேண்டும். என்பதே எல்லோரது பிரச்சனையும். இருப்பினும் விரைவில் ஏதாவது செய்வோம். என்றார்.

No comments:

Post a Comment