யாழ்.போதனா வைத்தியசாலையில் இது வரை 25 பேர் எச்.ஐ.வி தொற்று இருப்பதாக பதிவு செய்யப்பட்டு அதில் 3 பேர் இறுதிக்கட்டத்திலேயே
இனங்காணப்பட்டமையால் சிகிச்சையின்றி இறந்துள்ளனர். மற்றைய ஒருவர் வெளிநாட்டவர். அவர் தற்போது இங்கு இல்லை. மிகுதியாக உள்ள 21 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 14 பேர் ஆண்களும் 11 பேர் பெண்களாக உள்ளனரென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கணவன் மனைவியாக இருந்த 9 பேருக்கும் பலருடன் உறவில் இருந்த 15 பேரும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 9 பேரும் உள்;ரில் இருந்து தொற்று இனங்காணப்பட்டவர்கள் 6 பேரும் உள்ளடங்குகின்றனர்.
20 தொடக்கம் 30 வயதுடையவர்கள் 4 பேரும் 30 தொடக்கம் 40 வயதினர் 8 பேரும், 40 தொடக்கம் 50 வயதுடையவர்கள் 9 பேரும் 50 தொடக்கம் 60 வயதுடையவர்கள் 4 பேரும் உள்ளனர். இவர்களில் அதிகமா னனவர்கள் கல்வியறிவு அதிகளவில் உள்ளவர்களே ஆவர். இவை எமக்கு கிடைத்த தரவுகள் மாத்திரமே. ஆனால் இதைவிட பன்மடங்கானவர்கள் தொற்றுக்குள்ளாகி இருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்வதன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் எனஅவர் மேலும் தெரிவித்தார்.தேசிய எச்.ஐ.வி பரிசோதனை தினமான எதிர்வரும் யூன் மாதம் 28ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய பால்வினை மற் றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எச்.ஐ.வி தொற்றை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தில் அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றைய தினம் யாழ்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது.
அங்கு மேலும் தெரிவிக்கப்படுகையினில் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அண்ணளவாக 16 ஆயிரத்து 500 பேருக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் ஒருவர் மட்டுமே எச். ஐ.வி தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமார், பாலியல் தடுப்பு பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் சத்தியாகேரத், யாழ்; போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment