June 14, 2016

தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்ட கரப்பந்தாட்ட போட்டிகள்!

இத்தாலி பியல்லா நகரில் 12/06/2016 அன்று மேல்பிராந்திய விளையட்டுத்துறையால் தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்ட கரப்பந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டது . நிகழ்வில் பொதுச்சுடர்
ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் சுடர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.

போட்டியில் வீரவேங்கை அசோக் , சாள்ஸ் , கப்டன் மில்லர், ஈழவன் ,இளஞ்சுடர் , தமிழன் , லெப் கேர்ணல் விக்டர் ஆகிய கழகங்கள் பங்குபற்றின. விறுவிறுப்பாக நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் முதலாம் இடத்தை தமிழன் விளையாட்டு கழகமும் , இரண்டாம் இடத்தை லெப் கேர்ணல் விக்டர் விளையாட்டு கழகமும், மூன்றாம் இடத்தை சாள்ஸ் விளையாட்டு கழகமும் பெற்று வெற்றியீட்டின.

கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை ஈழவன் விளையாட்டு கழகமும், இரண்டாம் இடத்தை இளஞ்சுடர்விளையாட்டு கழகமும், மூன்றாம் இடத்தை வீரவேங்கை அசோக் விளையாட்டு கழகமும் பெற்று வெற்றியீட்டின. மாலை ஆறு மணியளவில் பரிசில்கள் வழங்கப்பட்டு தேசிய கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நிறைவுபெற்றது .


--. இத்தாலி மேல்பிரந்திய விளையாட்டுத்துறை --





No comments:

Post a Comment