June 24, 2016

பாராளுமன்றத்தில் சூடான வாத விவாதங்கள்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மஞ்சள் நீரில் நீராட்டி வெள்ளை ஆடைகளையும் அணிவித்தே போப் கமிட்டிக்கு அனுப்பிவைப்பார்கள் என விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு நேற்று கூறிய கருத்தை இன்று வன்மையாக சுனில் ஹந்துனெத்தி கண்டித்துள்ளார்.

பாராளுமன்றின் இன்றைய தின விவாதத்தின் போதே சுனில் ஹந்துனெத்தி மேற் கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் இடம்பெறும் செயற்பாடுகளை நன்கு அவதானித்து அதனைப்பற்றி தெரிந்து கொண்டு கருத்துக்களை கூறவேண்டும் எனவும், அடிப்படை அறிவு கூட இல்லாமல் தமது கருத்துக்களை பொதுவாக வெளிப்படுத்த வேண்டாம் எனவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,இதன்போது அநுர குமார திசாநாயக்க சுனில் ஹந்துனெத்திக்கு எதிராக கருத்து வெளியிட்டார்.
கடந்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் மூலம் மட்டு படுத்தப்பட்ட கடன் தொகையிலும் அதிகமாக 3300 மில்லியன் அளவிலான கடனைப் பெற்றுகொண்டுள்ளது.
இவ்வாறு பெற்று கொண்ட கடன் தொகைளை கடந்த அரசு உறவினர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சொத்துக்களைப் பெற்று கொடுப்பதற்காகவே பயன் படுத்தியதாக அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
மேலும், சிலர் தங்களின் குற்றங்களை மறைப்பதற்காக இவ்வாறன கருத்துக்ளை வெளியிடுவதாகவும் அவ்வாறன நபர்களின் முகத்துக்கு நேராகவே நான் கூற விரும்புகின்றேன் என ஆக்கிரோசமாக பேசிய போது, இவரின் பேச்சை சபாநாயகர் இடை நிறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment