நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைதுசெய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது தனிப்படை போலீஸ்.அப்போது அவர், சுவாதியை எப்படிக் கொலை செய்தேன் என்ற தகவலை விரிவாகச் சொன்னதாக போலீஸ் சொல்கிறது.
அவருடைய வாக்குமூலத்தை போலீஸ் தரப்பில் இருந்து சேகரித்தோம். அதில்,
பி.இ படிப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு கோச்சிங் கிளாஸுக்காக சென்னை வந்தேன். என் உறவினர் மதன் உட்பட செங்கோட்டையைச் சேர்ந்த 7 பேர் சூளைமேட்டில் உள்ள ஏ.எஸ் மேன்ஷனில் தங்கியதால், நானும் அங்கு தங்கினேன்.
அந்த வழியாகச் சென்ற சுவாதியைப் பார்த்தேன். அவரைப் பின்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரை ரயிலில் மூன்று முறை சென்றேன். அப்போது, சுவாதி வேலை பார்த்த இடத்தைக் கண்டுபிடித்தேன்.
சுவாதி தினமும் அவரது வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்வார். சுவாதிக்காக அந்தக் கோயிலுக்கு நானும் செல்வேன். ஒருநாள் அவரிடம் என் காதலைச் சொன்னேன்.
அவர் என்னை, ‘தேவாங்கு’ என்று திட்டியதோடு கன்னத்தில் ஓங்கி அடித்தார். அது எனக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது அரிவாளை எடுத்து வந்தேன். சுவாதியை கொலை செய்வதற்கு முன்புகூட அவரிடம் என் காதலை வெளிப்படுத்தினேன். அப்போதும் அவர், என்னை அசிங்கமாகத் திட்டினார்.
இதனால் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வாயிலேயே ஆத்திரம் தீர வெட்டினேன் என்று போலீஸில் சொல்லி இருக்கிறார் ராம்குமார்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். போலீஸ் காவலில் ராம்குமார் சொன்ன தகவல்கள் அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளோம். அவரின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், முகமது பிலால் சித்திக், காவலாளி கோபால், பிளாட்பார வியாபாரி சிவக்குமார், சுவாதியின் நண்பர்கள் 5 பேர் என 60 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ராம்குமார் வழக்கில் அடுத்த மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்ய உள்ளோம். ராம்குமார், சுவாதிக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதை ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் எடுக்க உள்ளோம்.
அடுத்து, ராம்குமாரின் செல்போனில் சுவாதியின் புகைப்படங்கள் உள்ளன.ராம்குமாரை கைதுசெய்வதற்கு முன்பு சுவாதியின் நெருங்கிய நண்பர் முகமது பிலால் சித்திக்கிடம் விசாரணை நடத்தினோம்.
அப்போது, பிலாலுக்கு ஏதாவது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அந்த விசாரணை நடந்தது. இதற்குக் காரணம், சுவாதியின் குடும்பத்தினருக்கும் மத அமைப்புக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கோச்சிங் வகுப்பில்தான் முதன்முதலில் சுவாதியும், பிலாலும் சந்தித்து உள்ளனர். நெருங்கிப் பழகி உள்ளனர்.
ராம்குமாரின் பின்னணியில் ஏதாவது மத அமைப்புகளின் பங்கு இருக்கலாம் என்ற கோணத்தில் உளவுத்துறை இரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மூன்று மாதங்கள் மட்டுமே ராம்குமார் மேன்ஷனில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. ஏற்கெனவே அவர், அதே மேன்ஷனில் 10-8-2015 முதல் நான்கு மாதங்கள் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
எட்டு மாதங்களுக்கு முன்பே அந்த மேன்ஷனில் தங்கியிருந்தபோது சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தியுள்ளோம் என்றார்.
ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜிடம் பேசினோம். இந்தக் கொலை வழக்குக்கும் ராம்குமாருக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. இந்தக் கொலைக்குப் பின்னணியில் சில அமைப்புகள் உள்ளன.
ஆனால், அதன் விவரம் சுவாதியின் குடும்பத்துக்கும் போலீஸுக்கும் தெரியும். தமிழக போலீஸ் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால், சி.பி.ஐ விசாரணை கேட்க உள்ளோம்.
சுவாதியின் லேப்டாப்பில் உள்ள தகவல்களை ஏன் போலீஸார் மறைக்க வேண்டும்?
போலீஸ் காவலில் ராம்குமாரை சித்திரவதை செய்துள்ளனர். ராம்குமாரின் தந்தை பரமசிவன், தன் மகனின் கழுத்தை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் அறுத்ததாக செங்கோட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் என்றார்.
சுவாதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து பேசிய டாக்டர் ஒருவர், சுவாதியின் உடலில் நான்கு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. பின்பக்கத்தில் இருந்தே அவரை வெட்டியிருக்க வாய்ப்பு உள்ளது.
கழுத்துப் பகுதியில் உள்ள கார்னியல் பிளேட் குழாய் அறுக்கக்கப்பட்டு இரத்தம் அதிகம் வெளியேறியதால் சுவாதி மரணம் அடைந்துள்ளார்.
கார்னியல் பிளேட் குழாய் அறுக்கப்பட்டால் மூன்று நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும். மருத்துவரீதியான இந்தத் தகவலைத் தெரிந்து கொண்டு சுவாதியைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

No comments:
Post a Comment