June 24, 2016

டேவிட் கேமரன் கமரூன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரன் கமரூன் தனது பதவியை விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா  வெளியேற வேண்டும் என முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.



தனது 10, டௌனிங் வீதி இல்லத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய டேவிட் கேமரன், எதிர்வரும் அக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் , கேமரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின்போது டேவிட் கேமரன், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், அதற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

No comments:

Post a Comment