May 21, 2014

வாட்ஸ் அப் பயனாளர்கள் 500 மில்லியனுக்கும் மேல் அதிகரிப்பு

வாட்ஸ் அப் mobile message application பயனாளர்கள் இப்போது 500 மில்லியனாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
உலகம் முழுவது அரை பில்லியன் மக்கள் இப்போது வாட்ஸ் அப் மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. பயனீட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக பிரேசில், இந்தியா, மெக்சிகோ, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் 700 மில்லியன் நிழற்படங்கள், 100 மில்லியன் காணொளிகள் பகிரப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வாட்ஸ் அப் பயனீட்டாளர்கள் 200 மில்லியனாக இருந்தது. தற்போது இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment