October 6, 2015

ஜப்பானிய நாடாளுமன்றில் ரணில் உரை (படங்கள் இணைப்பு)

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். சிறிலங்கா நேரப்படி இன்று காலை ரணில் விக்கிரமசிங்கவின் இந்த உரை இடம்பெற்றது.ஐந்து நாள் அதிகாரபூர்வ
பயணமாக ஜப்பானுக்குச் சென்றுள்ள சிறிலங்கா பிரதமருக்கு அங்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.இதன் உச்சக்கட்டமாகவே, ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அவருக்கு 30 நிமிட நேரம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், ஜப்பானிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மட்டுமே, உரையாற்றியுள்ளனர்.இந்த வரிசையில் மூன்றாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்றிரவு, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே இராப்போசன விருந்து அளிக்கவுள்ளார்.அத்துடன், ஜப்பானுடன் ரணில் விக்கிரமசிங்க பல இருதரப்பு உடன்பாடுகளிலும் கையெழுத்திடவுள்ளார்.



No comments:

Post a Comment