October 1, 2015

ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்படவில்லை சிறிலங்கா குறித்த தீர்மானம் – இன்றே விவாதம்!

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவை அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தன.அந்த தீர்மான வரைவு நேற்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது.இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கை மீதான விவாதம் ஆரம்பிக்கத் தாமதமானதால், இந்த தீர்மான வரைவு குறித்த விவாதம் நடத்தப்படவில்லை.இதையடுத்து அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவு இன்று விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தீர்மான வரைவுக்கு சிறிலங்கா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளும், இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment