September 24, 2015

யேர்மனியில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் வணக்க நிகழ்வு

திலீபனின் ஆகுதியில் தர்மமிருந்தது! நீதியிருந்தது! நேயமிருந்தது! அதனால் தான் அவனையும் அவன் கொள்கையையும் இன்றுவரை மக்கள் மனதில் கலங்கரை விளக்காக வைத்திருக்கிறார்கள். அகிம்சைப் போரினூடாக
தன்னை ஈந்த திலீபனின் அர்பணிப்புக்கு பின்னால் மறைந்து கிடக்கும் தீர்க்க தரிசனங்கள் யாவை? அவை இன்றுவரை எதை உணர்த்துகிறது? தமிழர் தாயகத்திற்காக தியாகச் செம்மலால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளின் நிறைவேறியவை தான் எத்தனை? இயல்பாக, விடையின்றி எம்முள்ளே பொசுங்கிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. இந்தக் கோரிக்கைகளினூடாக நிஜத்தின் விம்பமாக தமிழ்மக்களின் மனத்திரைகளில் நிதர்சனமாக வாழ்ந்துவருவது தவிர்க்க முடியாததாகின்றது.
அவனது தற்கொடையை நினைவுகூருவதோடு மட்டுமல்லாது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான வழிவகைகளையும் கண்டு ஆராயவேண்டும். இல்லையெனில் தியாகி திலீபனின் கோரிக்கைகள் மட்டும் அவன்போன்று என்றுமே மரணமின்றி நிரந்தரமாய் வாழும்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தலைவருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார். நினைவுதினத்தில் தலைவர் உண்ணாநோன்பு இருப்பது வழமை. அன்றைய தினம் தலைவரைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சங்கர் அண்ணாவின் வாகனம் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது.
தமிழீழ விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத வீர மறவர்களை நினைவு கூர்ந்து யேர்மனியில் ஒபர்கௌசன் நகரில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. சுடர்வணக்கம் , மலர்வணக்கம் செலுத்தப்பட்டு , மாவீரர்கள் நினைவோடு இசைவணக்கம் மற்றும் நடனங்கள்  மண்டபம் நிறைந்த மக்களோடு அரங்கேறியது .







No comments:

Post a Comment