ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை எனக் கூறி கையெழுத்துப் போராட்டம் நேற்று புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.
கையெழுத்து வேட்டை போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கையொப்பமிட்டு ஆரம்பித்துவைத்தார்.
வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா, முத்தையா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இக் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு வழங்குவதற்காக சர்வதேச விசாரணை கோரிய மனுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜா, இ.இந்திரராசா, மதத் தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கையெழுத்திட்டனர்.
No comments:
Post a Comment